RegisterLoginCheckout
பாரம்பரிய மருத்துவம்
 
FRUITS (பழங்கள்)

விளாம்பழம்

விளாம்பழம் தானாக வளரும் மரம், இதில் உள்ள பழம் யானைகள் விரும்பி சாப்பிடும். இதில் அதிசயம் யானை இந்த விளாம் பழத்தை உடைக்காமல் அப்படியே முழுங்கிவிடும். பின் யானை சாணத்தில் அந்த விளாம்பழம் அப்படியே வந்து விடும், அதை எடுத்து உடைத்து பார்த்தால் ஒன்றும் இருக்காது. விளாம்பழம் மரத்தடியில் விழுந்து இருந்தால் நல்ல மணம் வீசும். அந்த மணம் வந்த திசை நோக்கி சென்று அந்த பழத்தை எடுத்து விடலாம். இந்த பழத்தை எடுத்து அதில் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட நினைவாற்றல் பெருகும். விளாம்பழத்தில் கற்கண்டு சேர்த்து சாப்பிட கண்பார்வை அதிகரிக்கும். உடல் குளிர்ச்சியாகும். விளாம்பழத்தில் சர்க்கரை சேர்த்து சாப்பிட வயிற்றுபுண் ஆறும். ரத்தம் அதிகரிக்கும், நரம்பு பலப்படும். பித்த மயக்கம் சரியாகும். ஞாபகசக்தி அதிகரிக்கும். குமட்டல் நிற்கும்.

இது பழனி பஞ்சாமிர்தம் போல் இருக்கும். விளாம்பழம் பால் கலந்து சாப்பிட குடல் புன் ஆறும். உடல் வளர்ச்சி அதிகரிக்கும், சதை உருக்கி குணமாகும். எலும்பு பலப்படும். ரத்தம் சுத்தம் ஆகும். விளாம்மர இலை அரைத்து குழந்தையை குளிக்க வைக்க குழந்தைக்கு எந்த நோய்யும் வராது.

விளாம்மர இலை கொதிக்க வைத்து கஷாயம் குடிக்க உடல்வலி நீங்கும். விளாம்பழத்தை பால் ஆடையுடன் கலந்து முகத்தில் தடவி வர முகம் வசிகரம் ஆகும். முகப்பருக்கள் மாறும். விளாம்பழ ஒட்டை எடுத்து தீயில் கருக்கி சாம்பல் உண்டாக்கி தேனில் கலந்து சாப்பிட இடு மருந்து குணமாகும். தலையில் உள்ள பொடுகு, தலைவலி மாற, சீயக்காய், வெட்டிவேர், விளாம்பழ ஒடு, தேங்காய் ஒடு, வெந்தாயம் கலந்து அரைத்து தலை முழுகி வரவும். கண்ணுக்கு குளிர்ச்சி முடி உதிர்வதை கட்டுப்படுத்தும், முடி பஞ்சு போல் இருக்கும், பொடுகு காணமல் போகும். விளாம்பழத்தில் எல்லா பாகமும் மருத்துவ குணம் அடங்கி உள்ளது. இந்த மரம் குழந்தை வளர்க்கும் மரம் என்று பெயர் உள்ளது.

 
மற்றவை
நாவல் பழம்
வாழைப்பழம் (Banana)
திராட்சைப் பழம்
சீத்தாப்பழம்
அத்திப்பழம்
ஆப்பிள்
அன்னாசிப்பழம்
சப்போட்டா பழம்
நாட்டு பப்பாளி
நுனிப்பழம்
சங்கம் பழம்
வெள்ளரிப்பழம்
பனைப்பழம்
வில்வம் பழம்
பூவம் பழம்
நெய் பழம்
கற்றாழைப்பழம்
கோவைப்பழம்
நருளிப்பழம்
முந்திரிப்பழம்
எலுமிச்சைப்பழம்
சாத்துக்குடிப் பழம்
மாதுளைப் பழம்
அரசம் பழம்
ஆலம் பழம்
ஈச்சிப்பழம்
கொய்யாப்பழம்
மிதுக்கம் பழம்
வேப்பம் பழம்
பப்பாளிப்பழம்
HOME ABOUT US PRODUCT CONTACT US