RegisterLoginCheckout
பாரம்பரிய மருத்துவம்
 
HERBALS (மூலிகை)

அருகம்புல்

புல் இனங்களால் அதிக பயன் உள்ளது. இரும்பு கண்டு பிடிக்காத காலத்தில் விவசாயம் வளர்ச்சி அடையவில்லை. அப்பொளுது ஆதிமனிதன் புல் விளையும் பகுதியை நோக்கி நாடோடியாக நகர்ந்தான் ஏன் எனில் அன்று வாழ்வாதாரமாக இருந்தது கால்நடை வளர்ப்பு மட்டுமே.அதனால் புல்லினத்தின் பயனை அறிந்திருந்தான். கரும்பு, மூங்கில், சோளம் போன்ற புல்லினத்தை சேர்ந்த பயிர்களின் பயன்களை அறிந்திருந்தான். அந்த வகையில் அருகம்புல் பண்டைய காலம் தொட்டு மனித நலத்திற்கு உறுதுனையாக இருக்கிறது.

அருகம்புல் நமது சீதோஷன நிலைக்கேற்ப வறட்சியான பூமிகளில் கூட செழிப்பாக வளரும். நாம் நச்சுப்புகையும் மாசு படிந்த தூசியும் நிறைந்த பகுதியில் வாழ்கிறோம்.இதனால் உண்டாகும் நோய்களிலிருந்து அருகம்புல் காக்கிறது. அருகம்புல்லை கழுவி சாறு பிழிந்து சாப்பிட்டால் தேவையில்லாத கொழுப்பு குறையும். குடல் புண் ஆறும் . கண்பார்வை அதிகரிக்கும். ஆஸ்துமா , தோல் நோய் , அலர்ஜி மட்டுமல்லாது உடல் வெப்பத்தையும் சீராக்கும் அருமருந்து அருகம்புல்

 
மற்றவை
HOME ABOUT US PRODUCT CONTACT US