RegisterLoginCheckout
பாரம்பரிய மருத்துவம்
 
Oil (எண்ணெய்)

நல்லெண்ணெய் என ஏன் பெயர் வந்தது ?

விவசாயிகளுக்கும், உபயோகிப்பவர்களுக்கும் நல்லதே செய்வதால் நல்லெண்ணெய் என்று பெயர் வந்தது. எள் தமிழர்களின் பாரம்பரிய உணவு பொருள். எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மட்டுமே எண்ணெய் எனப்படும். பசுவின் பாலிலிருந்து எடுப்பது நெய்.எள்ளிலிருந்து எடுப்பது எள்+நெய்=எண்ணெய். எள் பிழி நெய்யோடு என்று நற்றினை சங்க பாடலிலேயே எள்நெய்யை பற்றி குறிப்பு இருக்கிறது. நெய்யை அப்படியே சாதத்தில் விட்டு சாப்பிடுவது போல் எள்நெய்யையும் அப்படியே சாதத்தில் விட்டு சாப்பிடலாம். வேறு எண்ணெய் என்றால் அதை கொதிக்க விட்டு பாலகாரங்களை பொறித்தோ, வறுத்தோ மட்டுமே சாப்பிடமுடியும்.

தற்போது சமையலுக்கு சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் போன்ற பலவகை எண்ணெய்களை உபயோகம் செய்கிறோம். ஆனால் தமிழர்கள் பாரம்பரிய உணவுக்காக பயன் படுத்தியது எள் எண்ணெய் மட்டுமே. எள்ளில் கருப்பு, சிவப்பு, வெள்ளை என மூன்று விதமான எள் ரகங்கள் உள்ளன.எள் என்றால் எண்ணெயாக இருப்பாள் என்பது பழமொழி. எள் விவசாயிகளுக்கு பலன் அளித்ததால் இந்த பழமொழி வந்தது. ஏன் எனில் எள் வறட்சியை தாங்கி வளரக்கூடியது. அதனாலேயே அதிலிருந்து கிடைக்கும் எண்ணெய்க்கு நல்ல எண்ணெய் என்று பெயரிட்டார்கள். நம் உடலுக்கும், பயிரிட்டோருக்கும் பயன் தரும் எண்ணெய் நல்ல எண்ணெய் தானே.

 
மற்றவை
HOME ABOUT US PRODUCT CONTACT US