RegisterLoginCheckout
பாரம்பரிய மருத்துவம்
 
Oil (எண்ணெய்)

நிலக்கடலை

நிலக்கடலையில் இரண்டு வகை உண்டு. ஒன்று நாட்டு கடலை, மற்றொன்று ஒட்டுரக கம்பெனி கடலை. நாட்டுகடலை பெரும்பாலும் மூன்று பருப்புடன் விளையும் , வேலூர் பகுதியில் இரண்டு பருப்புடன் வளரும் கடலையும் உண்டு. நாட்டுரகம் 6மாதம் வளரக்கூடியது.கம்பெனி கடலை நான்கு மாதத்தில் வளர்ந்துவிடும். நாட்டு நிலகடலை பெரிதாக இருக்கும். அந்த கடலை இப்போது வடநாட்டில் விளைகிறது. இந்த கடலை முதலில் தமிழ்நாட்டில் மட்டுமே பயிரிடப்பட்டது. இது எப்படி வட நாட்டிற்கு சென்றது என்றால் மகாத்மாகாந்தி கடலையும், ஆட்டுபாலும் விரும்பி சாப்பிடுவார் என்பது எல்லோரும் அறிந்தது.அவர் தமிழகம் வந்தபோது இதன் சுவையை உணர்ந்து வடநாட்டில் பயிரிட செய்தார். இந்த நாட்டு ரக கடலை தற்போது தமிழகத்தை விட வட மாநிலங்களில் அதிகம் பயிரிடப்படுகிறது . இரண்டு ரகங்களில் நாட்டு ரகம் சுவையானது, அதிக புரதசத்து உள்ளது. எண்ணெய் சத்து குறைவாக உள்ளது. ஒட்டுரக கடலை அதிக எண்ணெய் சத்தும் குறைந்த புரதசத்து உள்ளது.

 
மற்றவை
HOME ABOUT US PRODUCT CONTACT US